சடுதியாக உயர்வடைந்ந மரக்கறி விலை
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடாக (02.06.2024) கொள்வனவு மற்றும் விற்பணை செய்யப்படும் மரக்கறிகளுக்கான விலை பட்டியலை நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற, முட்டை கோஸ் 60-80 ரூபாய், கரட் 110-130 ரூபாய், லீக்ஸ் 350-370 ரூபாய், ராபு 80-100 ரூபாய், இலையுடன் பீட்ரூட் 220-240 ரூபாய், இலையில்லா பீட்ரூட் 320-340 ரூபாய்,உருளை கிழங்கு 210-230 ரூபாய், உருளை கிழங்கு சிவப்பு 200-220 ரூபாய்,நோக்கோல் 100-120 ரூபாய் என மொத்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் உயர் தர சமையலுக்கு பாவிக்கப்படும் கொத்தமல்லி இலை கிலோ ஒன்றின் விலை 2300-2400, அதேபோல ஐஸ்பேர்க் 3500-3600 ரூபாய், சலட் இலை 1700-1800 ரூபாய், ப்ரக்கோலி 1500-1600 ரூபாய்,கோலிப்ளவர் 1500-1600 ரூபாய் என அதிகமாக விலையில் கொள்வனவு மற்றும் விற்பணனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம்
நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் காலநிலை மாற்றம் காரணமாக மரக்கறிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இருந்தபோதிலும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என பொருளாதார மத்திய நிலைய காரியாலய அதிகாரி தெரிவித்துள்ள அதேநேரம் நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் கிலோவுக்கு குறையாத மரக்கறி வகைகள் கொள்வனவு செய்யப்பட்டு வெளியிட சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.