தேங்காய் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka Coconut price
By Rakshana MA Mar 01, 2025 03:31 AM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் மே மாதத்தின் பின்னர் தேங்காய் விலையில் மாற்றம் ஏற்படுமென்று எதிர்பார்ப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கூறுகையில், இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 200 மில்லியன் தேங்காய்களை அறுவடை செய்ய முடியுமென தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இறக்குமதிக்கான அனுமதி 

அத்துடன், தேங்காய் மற்றும் தேங்காய் சார் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் சில நாட்களில் ஆரம்பமாகும்.

தேங்காய் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Today Price In Sri Lanka

மேலும், அறுவடை வீழ்ச்சியால் ஏற்படும் பற்றாக்குறையை நிரப்ப தேங்காய் பால், தேங்காய் பால் மா மற்றும் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிந்தவூரில் கரையொதுங்கிய பாரிய தண்ணீர் தாங்கி

நிந்தவூரில் கரையொதுங்கிய பாரிய தண்ணீர் தாங்கி

ஒருதலைப்பட்சமாக செயற்பட்ட சபைத்தலைவர் : ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு

ஒருதலைப்பட்சமாக செயற்பட்ட சபைத்தலைவர் : ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW