பெரிய வெங்காயத்திற்கான பண்ட வரியினை குறைக்க நடவடிக்கை
ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்திற்கான பண்ட வரியினை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் பண்டவரியை, 30 ரூபாவில் இருந்து 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறைக்கப்பட்ட வரி
இந்த வரி குறைப்பானது, டிசம்பர் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் எடுக்கப்படும் விஞ்ஞாபன முடிவுகளின் அடிப்படையில் தகுந்த சட்ட விதிகளின் கீழ் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் விவசாயிகளின் நலனுக்காகவும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யவும் உறுதி செய்ய குறுகிய கால நடவடிக்கையாக இதனை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |