தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று..!

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka National People's Power - NPP Budget 2025
By Rakshana MA Feb 17, 2025 04:34 AM GMT
Rakshana MA

Rakshana MA

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 2025 நிதியாண்டின் வரவிருக்கும் மாதங்களுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இலங்கையின் 79வது பட்ஜெட் இன்று(17) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

சமர்ப்பிக்கவுள்ள பட்ஜட்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கும் முதல் பட்ஜெட் இதுவாகும். வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று..! | Today Npp Government S First Budget 2025

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி 25 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு இடம்பெறவுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

பின்னர் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பை மார்ச் மாதம் 21 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கல்முனை சாஹிராவில் கௌரவப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

கல்முனை சாஹிராவில் கௌரவப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கையில் சிறுநீரக நோயினால் உயிரிழக்கும் பலர்

இலங்கையில் சிறுநீரக நோயினால் உயிரிழக்கும் பலர்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW