இன்று புனித ரமழான் ஆரம்பம்
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கான புனித ரமழான் மாதம் இன்று(02) ஆரம்பமாகின்றது.
நேற்றையதினம் ஆரம்பமாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், 01ஆம் திகதி பிறை தென் படாதததால் இன்று இலங்கை முஸ்லிம்களால் நோன்பு நோற்கப்படுகின்றது.
இந்த நோன்பு தொடர்பான உறுதியினை கொழும்பு பெரிய பள்ளிவாசல் தீர்மானித்து அறிவித்துள்ளது.
புனித ரமழான்
அடுத்த 29-30 நாட்கள் முழுவதும், காலை முதல் மாலை வரை, முஸ்லிம்கள் உணவு, பானம் மற்றும் உலகப் பேச்சுக்களிலிருந்து விலகி, ஆன்மீக வளர்ச்சிக்கும், கருணைக்கும், இறை பணியாற்றுதலுக்கும் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள்.
ரமழான் என்பது ஒரு உடல்நல நோன்பு மட்டுமல்ல, இதுவே அக ஆரோக்கியம் மற்றும் எண்ணங்களை சுத்திகரிக்கும் நேரமாக காணப்படுகின்றது.
இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி, தனது செயல்களை மறுபரிசீலித்து, வருந்தி, இன்பமுறையிலான வாழ்வை வழிபடுவதாகும்.
இந்த புனித மாதம் தொடங்கும் காலத்தில், பள்ளிகளிலும் சமூகங்களிலும் ஒற்றுமையுடன் இதை வரவேற்போம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |