டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபா - மத்திய வங்கி

By Fathima Mar 18, 2024 08:49 AM GMT
Fathima

Fathima

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 5.6 சதவீதத்தால் வலுப்பெற்றுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (18.03.2024) நாணயமாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நாணயமாற்று விகிதம்

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 05 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 309 ரூபாய் 67 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபா - மத்திய வங்கி | Today Dollar Exchange Rates Sri Lanka

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபாய் 50 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 395 ரூபாய் 80 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325 ரூபாய் 02 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 338 ரூபாய் 73 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபாய் 21 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 19 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.