இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

Sri Lankan Peoples Department of Meteorology Climate Change
By Rukshy Apr 02, 2025 02:50 AM GMT

தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருகோணமலையில் பொலிஸார் மற்றும் இளைஞர்களிடையே மோதல்

திருகோணமலையில் பொலிஸார் மற்றும் இளைஞர்களிடையே மோதல்

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம்

மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு | Today Climate Change Sri Lanka

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டில் இதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் இதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பால் உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு!

பால் உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW