கரையோரப் பிரதேசங்களில் ஏற்படவுள்ள வானிலை மாற்றம்

Rakshana MA
நீர்கொழும்பிலிருந்து காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.
வானிலை குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கரையோரத்தில் மாற்றம்
இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்தோடு தென்மேற்கிலிருந்து அல்லது குறிப்பிட்ட திசை இல்லாமல் காற்று வீசும் மற்றும் காற்றின் வேகம் மணிக்கு 10-15 கி.மீ. ஆக காணப்படும்.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தக் கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், பின்னர் அது தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறும் என சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |