டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Sep 24, 2024 12:28 PM GMT

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (24.09.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 309.08 ரூபாவாகவும், கொள்வனவு விலை 299.71 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 229.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 220.17 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் தங்க விலை

தொடர்ந்து அதிகரிக்கும் தங்க விலை

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 345.03 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 331.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 414.08 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 398.63 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 213.47 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 203.44 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 241.26 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 230.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பொதுத்தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்: ருவன் விஜேவர்தன தெரிவிப்பு

பொதுத்தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்: ருவன் விஜேவர்தன தெரிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW