பொதுத்தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்: ருவன் விஜேவர்தன தெரிவிப்பு

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Election
By Laksi Sep 24, 2024 09:39 AM GMT
Laksi

Laksi

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தேசியப் பட்டியலின் ஊடாகவும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசகர்

இந்த நிலையில், பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது நாடாளுமன்றத்திற்குள் நுழையவோ மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்: ருவன் விஜேவர்தன தெரிவிப்பு | Ranil Will Not Contest The General Elections

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசகராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பதவி விலகியதாக தகவல்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பதவி விலகியதாக தகவல்

கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்று ஆசி பெற்ற புதிய ஜனாதிபதி

கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்று ஆசி பெற்ற புதிய ஜனாதிபதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW