திருகோணமலையில் கோரவிபத்து : ஒருவர் பலி

Sri Lanka Army Trincomalee Sri Lankan Peoples Eastern Province Accident
By Rakshana MA Apr 14, 2025 10:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலை - கந்தளாய் அக்பர் பிரதேசத்தில் தனியார் பஸ், இராணுவத்தின் பார ஊர்தி ஒன்று நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 27 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த கோர விபத்து கந்தளாய் பிரதேசத்தில், அக்போபுர பொலீஸ் பிரிவுக்குட்பட்ட 86வது மைல் கல்லில், இன்று காலை இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கித்துள்ளனர்.

வரலாறு காணாதளவு உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

வரலாறு காணாதளவு உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

விபத்துச் சம்பவம் 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கண்டி, மாவனல்ல, உயன்வத்த பகுதியில் இருந்து, 26 உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன் திருகோணமலை நோக்கி வந்த, தனியார் பஸ் ஒன்று, திருகோணமலையிலிருந்து தென்பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் பார ஊர்தி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

திருகோணமலையில் கோரவிபத்து : ஒருவர் பலி | Today Accident In Trincomalee

பஸ் வண்டியில் பயணித்த 25 வயதான மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, முகமட் அஸ்கர் முகமட் அர்சாத் என்பவரே உயிரிழந்துள்ளார்.

காயங்களுக்குள்ளானோர் கந்தளாய் மற்றும் திருகோணமலை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அக்போபுர பொலீசார் தெரிவிக்கின்றனர்.

தன்னை ஜனாதிபதியாக இன்னும் உணர்ந்து கொள்ளாத அநுர

தன்னை ஜனாதிபதியாக இன்னும் உணர்ந்து கொள்ளாத அநுர

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

          நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW