வரலாறு காணாதளவு உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

Gold Price in Sri Lanka Today Gold Price Money Dollars Gold
By Rakshana MA 11 days ago
Rakshana MA

Rakshana MA

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை புதிய சாதனையைப் பதிவு செய்து, ஒரு அவுன்ஸுக்கு 3,235 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது 2025இல் தங்கத்தின் மிக உயர்ந்த விலையாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

புவிசார் அரசியல் பதற்றங்கள், குறிப்பாக அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக மோதல்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகக் கட்டுப்பாடுகள் முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி திருப்பியுள்ளன.

சூரியன் மேற்கில் உதித்தால் என்ன நடக்கும்?

சூரியன் மேற்கில் உதித்தால் என்ன நடக்கும்?

உலகப் பங்குச் சந்தை

உலகப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட 10வீத சரிவு, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி வீதக் குறைப்பு எதிர்பார்ப்புகள் மற்றும் டொலரின் மதிப்பு சரிவு ஆகியவையும் தங்கத்தின் தேவையை அதிகரித்துள்ளன.

மேலும், சீனா, இந்தியா உள்ளிட்ட மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல் 2024இல் 1,000 மெட்ரிக் தொன்களைத் தாண்டியதால், விலை உயர்வுக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.

வரலாறு காணாதளவு உச்சம் தொட்ட தங்கத்தின் விலை! | International Market Gold Price Today

2026இல் 3,350 டொலர்களை எட்டும் ஜனவரியில் 2,796 டொலர்களாக இருந்த தங்கத்தின் விலை, பெப்ரவரியில் 2,900 டொலர்களையும், மார்ச்சில் 3,128 டொலர்களையும் தாண்டியது.

ஏப்ரல் 12இல் 3,200 டொலர்களை உடைத்து, தற்போது 3,235 டொலர்களை எட்டியுள்ளது.

கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் 2025 இறுதிக்குள் தங்கம் 3,300 டொலர்களை எட்டும் எனவும், பேங்க் ஆஃப் அமெரிக்கா 2026இல் 3,350 டொலர்களை எட்டும் எனவும் கணித்துள்ளன.

இருப்பினும், புவிசார் பதற்றங்கள் குறைவடைந்தால் விலை சீராகலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எப்.பி.ஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எப்.பி.ஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

          நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW