மட்டக்களப்பில் இருந்து வெளியான பேருந்து விபத்து : ஒருவர் பலி
மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த விபத்து சம்பவமானது, கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்து தெரியவருவது, பேருந்துக்கு முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாரிய விபத்து
இன்று அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 12 பயணிகள் மற்றும் லொறியின் ஓட்டுநர் காயமடைந்து தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும், உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.
மரணித்தவரின் சடலம் தங்காலை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


