சம்மாந்துறையில் தடம்புரண்ட டிப்பர்

Batticaloa Sri Lankan Peoples Eastern Province Accident
By Rakshana MA May 11, 2025 05:57 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு(Batticaloa) கிரான்குளம் பகுதியில் இன்று(11) அதிகாலை சம்மாந்துறை நோக்கி பழங்களை ஏற்றி வந்த டிப்பர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் சீமூன் ஹோட்டலுக்கு அருகாமையில் குறித்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.

ஓட்டமாவடி அருகே இளைஞர்களை மோதித்தள்ளிய மர்ம வாகனம்!

ஓட்டமாவடி அருகே இளைஞர்களை மோதித்தள்ளிய மர்ம வாகனம்!

விபத்துக்கான காரணம் 

எம்பிலிப்பிட்டியவில் இருந்து பழங்களை ஏற்றிக்கொண்டு மட்டு கல்முனை பிரதான பாதை வழியே சம்மாந்துறை நோக்கி சென்ற டிப்பர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்மாந்துறையில் தடம்புரண்ட டிப்பர் | Today Accident At Sammanthurai

இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிரான்குளம் பகுதியால் பயணிக்கும் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டு வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும், இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவந்துள்ள அதே வேளை வாகனம் பாரியளவான சேதத்தை எதிர்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி, சமத்துவம் மற்றும் அடக்குமுறை : இஸ்லாமிய ஆட்சி முறையின் விளக்கம்

நீதி, சமத்துவம் மற்றும் அடக்குமுறை : இஸ்லாமிய ஆட்சி முறையின் விளக்கம்

உயிரிழந்த மாணவி தொடர்பில் மீஸான் பௌன்டேஷன் முன்வைத்துள்ள கோரிக்கை

உயிரிழந்த மாணவி தொடர்பில் மீஸான் பௌன்டேஷன் முன்வைத்துள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery