மீண்டும் திறக்கப்படும் யால தேசிய பூங்கா

Sri Lanka Tourism Sri Lanka Tourism
By Rakshana MA Mar 05, 2025 05:16 AM GMT
Rakshana MA

Rakshana MA

யால தேசிய பூங்காவில் (Yala National Park) சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சாலைகளை இன்று (05) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 2:00 மணி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க முன்னெடுக்கப்படும் திட்டம்

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க முன்னெடுக்கப்படும் திட்டம்

காலநிலை பொறுத்து..

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் யால தேசிய பூங்காவின் சாலை அமைப்பிற்கு ஏற்படும் சேதத்தைக் குறைப்பதற்கும், அதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கும், மார்ச் 01ஆம் திகதி முதல் யால தேசிய பூங்காவை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மீண்டும் திறக்கப்படும் யால தேசிய பூங்கா | To Be Reopen The Yala National Park

இருப்பினும், மழை காரணமாக கடந்து செல்ல முடியாத சாலைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு தொடர்ந்து மூடப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை யால தேசிய பூங்காவில் பெய்யும் மழையைப் பொறுத்து இந்த நிலைமை மாறக்கூடும் என்று வனவிலங்கு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

திரைப்படமாகவுள்ள மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு ! நாமல் வெளியிட்ட தகவல்

திரைப்படமாகவுள்ள மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு ! நாமல் வெளியிட்ட தகவல்

வீழ்ச்சியடையும் டொலர் பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

வீழ்ச்சியடையும் டொலர் பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW