மனைவியை நண்பர்களுடன் உறவுகொள்ள வற்புறுத்திய கணவன்; பொலிஸில் சரணடைந்த பெண் !

Sri Lanka
By Nafeel May 08, 2023 11:53 AM GMT
Nafeel

Nafeel

கணவன் ஆபாச திரைப்படங்களில் வரும் பாலியல் காட்சிகள் போன்று தனது மனைவியை வற்புறுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது

அந் நபரை வெல்லம்பிட்டிய பொலிஸார் நேற்று (7) கைது செய்துள்ளனர்.

ஐஸ் போதைப்பொருளுக்கு அதிக அடிமையாகியுள்ள இந்த சந்தேக நபர் ஆபாசப் படங்களுக்கும் அடிமையாகியுள்ளார்.

அந்தப் படங்களில் உள்ள பாலுறவு சைகைகளைப் பின்பற்றி தமது நண்பர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டுமென சந்தேகநபரான கணவர் நிர்பந்தித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபரின் அழுத்தத்தை தாங்க முடியாமல் அவரது மனைவி வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.