தமிழ் - முஸ்லிம் ஐக்கிய வாழ்வை உணர்ந்து செயல்படும் கட்சி : இரா.சாணக்கியன் கருத்து
தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியானது, தமிழ் - முஸ்லிம் ஐக்கிய வாழ்வை உணர்ந்து செயல்படுகிறது என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(20) மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் தெரிவு அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேலுள்ளவாறு குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் வாகரை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இன ஒற்றுமை
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், "தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ வேண்டியதைக் தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சி (TMVP) உணர்ந்து செயல்படுகிறது என நம்புகிறேன்,".
மேலும், வாகரை பிரதேச சபையில், இன்று ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய சகோதரரை, தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் முன்மொழிந்து, வழிமொழிந்துள்ளனர்.
இது முக்கியமான ஒற்றுமைச் செயற்பாட்டாகும்.” இச்சம்பவம், கிழக்குப் பிராந்தியத்தில் தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையிலான இணக்கத்தை வலுப்படுத்தும் ஒரு முன்னேற்றமாகவும், அரசியல் ஒற்றுமை மற்றும் சமூக நிலைத்தன்மைக்கான அடையாளமாகவும் பலர் பார்க்கின்றனர் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |