புத்தளம் -அனுராதபுரம் வீதியில் கனரக வாகனம் கவிழ்ந்து விபத்து

Anuradhapura Puttalam Sri Lanka Police Investigation
By Laksi Dec 06, 2024 09:08 AM GMT
Laksi

Laksi

புத்தளம் (Puttalam) - அனுராதபுரம் பிரதான வீதியின் அந்தரவெவ சந்திக்கு அருகில் பலகைகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த கனரக வாகனமே இதன்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொள்ளலவை விட அதிகமான பலகைகளை வாகனத்தில் ஏற்றியதாலும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலும் இந்தவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை கிட்டங்கி பால நிர்மாணிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கல்முனை கிட்டங்கி பால நிர்மாணிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மேலதிக விசாரணை

இந்த விபத்தில் சாரதியும் உதவியாளரும் காயங்களுக்குள்ளாகி நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தளம் -அனுராதபுரம் வீதியில் கனரக வாகனம் கவிழ்ந்து விபத்து | Tipper Accident In Anuradhapura

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை பிரதேச முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்: ஹக்கீம் உறுதி

கல்முனை பிரதேச முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்: ஹக்கீம் உறுதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW