வரி அடையாள இலக்கம் வழங்குவதில் சிக்கல்
18 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் TIN இலக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், அதில் பல பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் போதிய உபகரணங்கள் இல்லாமை போன்ற பல பிரச்சினைகள் இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நீண்ட மீளாய்வுக் கூட்டத்தின் போது, இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு பணியாளர்களை பணியமர்த்துவதற்கு அனுமதி வழங்குதல், பட்டதாரிகளை பணியமர்த்துதல் உள்ளிட்ட பல தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
TIN இலக்கம் வழங்க நடவடிக்கை
இதற்கமைய, நியாயமான கொடுப்பனவுகளின் கீழ் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மூலம் TIN இலக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பி்ட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |