இலங்கையில் முக்கிய கல்வி நடவடிக்கைக்காக tiktok..!
இலங்கையில் கல்வி நோக்கங்களுக்காக TikTok சமூக வலைத்தளத்தை டிஜிட்டல் கருவியாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று TikTok சமூக ஊடகத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பொழுதுபோக்குக்கு அப்பால் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும் இந்த கலந்துரையாடலின் முக்கிய அம்சமாகும்.
கல்வி நடவடிக்கை
டிஜிட்டல் கல்வி பற்றிய அறிவை வழங்க பாடத்திட்டம், ஆராய்ச்சி மற்றும் ஒழுங்குமுறைகளில் தேவையான திருத்தங்களை சேர்ப்பதன் முக்கியத்துவத்தையும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்தி TikTok மூலம் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அதன் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
கல்வித் துறையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சீர்திருத்தங்களுடன் இத்தகைய ஒத்துழைப்புகளைப் பாராட்டிய பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, டிஜிட்டல்மயமாக்கல் செயல்முறையை விரைவில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை மேலும் வலியுறுத்தினார்.
இந்த கலந்துரையாடலில் தெற்காசிய TikTok நிறுவனத்தின் அரசு உறவுகள் தலைவர் மற்றும் தெற்காசிய மக்கள் விவகாரத் தலைவர் ஃபெர்டூஸ் அல் மொட்டகின் (Ferdous Al Mottakin), பிரதமரின் மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |