மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை

By Raghav Aug 01, 2025 11:54 AM GMT
Raghav

Raghav

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை

அதேநேரம், மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை | Thunderstorms In The Evening

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.