நுவரெலியா - நானுஓயாவில் முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து விபத்து

Nuwara Eliya Central Province Accident
By Independent Writer Apr 06, 2024 08:14 AM GMT

நுவரெலியா - நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதியில் முச்சக்கர வண்டியொன்றின் மீது மரம் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

குறித்த விபத்து சம்பவமானது, நேற்று இரவு (05) இடம்பபெற்றுள்ளது. 

இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த சிறுவன் காயமடைந்துள்ளதுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சட்டவிரோத நடவடிக்கை 

முச்சக்கரவண்டியானது, நானுஓயா - கிளாசோ பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்து கொண்டிருந்த போது வீதியோரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சட்ட விரோதமாக வெட்டப்பட்டுக் கொண்டிருந்த மரம் திடீரென சரிந்ததில் வீதியில் சென்ற முச்சக்கரவண்டி மீது வீழ்ந்துள்ளது. 

எனினும், குறித்த மரத்தினை வெட்டியவர்கள் தொடா்பில் தகவல் தெரியாத நிலையில் சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

மேலும், விபத்தினால் சற்று நேரம் வீதியூடான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியும் முழுமையாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.