யாழில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து : 11பேர் படுகாயம்

Jaffna Sri Lankan Peoples Hospitals in Sri Lanka Accident
By Fathima Jun 14, 2023 09:21 AM GMT
Fathima

Fathima

யாழில் முன்பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம், கொழும்புத்துறை - உதயபுரம் பகுதியில் இன்று(14.06.2023) இடம்பெற்றுள்ளது.

முன்பள்ளி ஒன்றிற்கு 11 மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கரவண்டியே இவ்வாறு வீதியோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

 யாழில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து : 11பேர் படுகாயம் | Three Wheeler Overturns In Jaffna

இதன்போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த 11 மாணவர்களும் காயமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் காயமடைந்த 12 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.