போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை: குவைத்தில் 3 இலங்கையர்கள் கைது!

Sri Lankan Peoples Crime World Kuwait
By Vinoja Jun 11, 2026 04:59 PM GMT

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடையதாக, மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை குவைத் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின் பிரகாரம், கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இலங்கையர்கள், இரண்டு குவைத் பிரஜைகள், ஒரு இந்தியர் மற்றும் மேலும் ஒரு வெளிநாட்டவர் அடங்குகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை: குவைத்தில் 3 இலங்கையர்கள் கைது! | Three Sri Lankans Arrest In Kuwait

இந்த நடவடிக்கையின் போது ஹஷிஷ், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், போதைப்பொருட்களை எடைபோடவும் பொதியிடவும் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.