புத்தளம் தொடருந்து விபத்தில் இரு குழந்தைகள் உட்பட மூவர் பலி

Puttalam Sri Lanka Police Investigation
By Madheeha_Naz Feb 19, 2024 01:56 PM GMT

புத்தளம் - ஆராய்ச்சிக்கட்டுவ, மய்யாவ பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மய்யாவ பகுதியில் தொடருந்து ஒன்றுடன், உந்துருளி ஒன்று மோதியதில் இன்று (19.02.2024) பிற்பகல் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் தாய் மற்றும் அவரது மகள் ஆகியோருடன் மற்றுமொரு சிறுமி ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். 

மேலதிக விசாரணை

இந்நிலையில், சடலங்கள் முந்தலம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

புத்தளம் தொடருந்து விபத்தில் இரு குழந்தைகள் உட்பட மூவர் பலி | Three People Died Including Two Children

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராய்ச்சிக்கட்டுவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.