இன்று அதிகாலை கோர விபத்து : ஸ்தலத்திலேயே மூவர் பலி

By Fathima Mar 09, 2024 06:58 AM GMT

அனுராதபுரம் – ரம்பேவ பிரதான வீதியில் இன்று அதிகாலை பயணித்த பாதசாரிகள் மீது கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

ரம்பேவ கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த குழுவினர் மீது இன்று அதிகாலை ஜீப் வண்டி ஒன்று மோதி விட்டு சென்றுள்ளது.

மேலதிக விசாரணை

விபத்தினால் காயமடைந்த ஐந்து பேரும் மிஹிந்தலை ரம்பேவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிசிச்சை பலனின்றி மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை கோர விபத்து : ஸ்தலத்திலேயே மூவர் பலி | Three Killed Two Injured In Road Accident

சம்பவத்தை அடுத்து குறித்த கெப் வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.