புத்தளத்தில் மின்சாரம் தாக்கி மூவர் பலி
புத்தளத்தில் (Puttalam) மின்சாரம் தாக்கியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (29) மாலை புத்தளம்- மாம்புரி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் பலஞ்சியின் மீது மின்சாரம் பாய்ந்ததில் அதனை தூக்கிச் சென்ற 4 பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
உயிரிழப்பு
இருப்பினும், அவர்களில் ஒருவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் உயிர் பிழைத்துள்ளதுடன் ஏனைய மூவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் புத்தளம் சோல்ட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், மதீனா நகர் பகுதியைச் சேர்ந்த இருவரும் உள்ளடங்குவதாக தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |