வட பகுதியில் போலி தங்கத்துடன் பெண் உட்பட மூவர் கைது
கிளிநொச்சியில் (Kilinochchi) 4 கிலோ கிராம் தங்க மூலாம் பூசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கட்டியுடன் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கை கைது கிளிநொச்சி - கந்தசுவாமி ஆலயம் அருகில் நேற்று (27.4.2024) இரவு 11.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட காரும் பெலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் தகவல் தெரிவிக்கையில், இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக கந்தசுவாமி ஆலயமருகில் இரவு 11.00 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வாகனத்தை விசேட அதிரடிப்படையினர் சோதனை செய்த போது, காரில் மறைக்கப்பட்ட நிலையில் வவுனியாவிற்கு கடத்த முற்பட்ட தங்க மூலாம் பூசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கட்டி மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட காரும் அதன் சாரதி மற்றும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
    