போதைப்பொருட்களுடன் கிரிக்கெட் வீரர் உட்பட மூவர் கைது
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lankan Peoples
Southern Province
By Fathima
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் கிரிக்கெட் வீரர் ஒருவர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தென் மாகாண - கொஸ்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடகம பிரதேசத்தில் வைத்து குறித்த நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தல்
விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்தை சுற்றி வளைத்த போதே இராணுவ கிரிக்கெட் அணிக்கு விளையாடும் வீரர் ஒருவருடன் சந்தேகநபர்களை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.