தமிழர் பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Raghav Jun 28, 2024 09:07 PM GMT

யாழ்ப்பாணம்(Jaffna) - கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (28) இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதான மூவர் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கூடியிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் சந்தேகம்

இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் கைக்கோடாரிகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழர் பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது | Three Arrested With Sharp Weapons In Jaffna

அத்துடன், சந்தேகநபர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக இருந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) முற்படுத்த கோப்பாய் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW