பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான முட்டைகள் கைப்பற்றப்பட்டன!

Colombo Sri Lanka
By Fathima Apr 12, 2023 12:19 PM GMT

கொழும்பு - மருதானை, மரியகட பகுதியில் வியாபார நிலையமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15,000இற்கும் அதிகமான முட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்றைய தினம் (12.04.2023) குறித்த விற்பனை நிலையம், நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டபோதே முட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான முட்டைகள் கைப்பற்றப்பட்டன! | Thousands Of Eggs Were Seized

அதிக விலைக்கு விற்பனை

மறைத்து வைக்கப்பட்டிருந்த முட்டைகளை, வியாபார நிலையத்திற்கு வெளியில் வைத்து 44 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

முட்டைகளை மறைத்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோர் தொடர்பில் தொடர்ச்சியாகச் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.