சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பதிவான மாற்றம்
Sri Lanka Tourism
Sri Lanka
Tourism
Tourist Visa
World
By Rakshana MA
இந்த மாதத்தின் கடந்த 4 வாரங்களில் கிட்டத்தட்ட 150,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, இதுவரை 144,320 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
அவர்களில் அதிக எண்ணிக்கையில் இந்திய சுற்றுலாப் பயணிகளும் பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிக எண்ணிக்கையில் நாட்டிற்கு வந்துள்ளனர்.
இந்த வருடத்தில் இதுவரை நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 866,596 ஆகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |