கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Ministry of Education Department of Examinations Sri Lanka Education schools
By Fathima Dec 16, 2025 05:18 AM GMT
Fathima

Fathima

தரம் 6 முதல் தரம் 10 வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகளை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2025ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  

தீர்மானம் 

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறிப்பாக அனைத்துப் பாடசாலை அதிபர்களும் இந்த அறிவுறுத்தலை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு | Third Term Exam Schools

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை அடுத்த தரங்களுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 11 ஆம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சையை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.