இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட மூன்றாவது தலிபான் அமைச்சர்!
ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைச்சர் நூர் ஜலால் ஜலாலி நேற்று புதுடில்லிக்கு சென்றுள்ளார்.
இதன்படி, கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட மூன்றாவது தலிபான் அமைச்சர் இவர் ஆவார்.
தலிபான் அமைச்சர்
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே சுகாதாரத் துறையில் உறவை வலுப்படுத்த அவர் சென்றுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த விஜயம் ஆப்கானிஸ்தானின் சுகாதாரத் துறைக்கு இந்தியாவின் நீடித்த ஆதரவை பிரதிபலிக்கிறது என்று ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த ஒக்டோபரில் ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி வருகை தந்தார்.
பின்னர், நவம்பரில் ஆப்கனின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜிஜி இந்தியாவுக்கு சென்றிருந்தார்.