திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் கைது - மீட்கப்பட்ட திருட்டு பொருட்கள்
கிளிநொச்சி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்றையதினம் (08.12.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் 2023.11.29 அன்று திருட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 47 பவுண் தங்க நகை இவ்வாறு களவாடப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக கிளிநொச்சி விஷேட பிரிவின் உத்தியோகத்தர் S.A விவேகானந்தருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து, கிளிநொச்சி பொலிஸ் நிலையப்பிரிவின் குற்றவிசாரணை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கருணரத்தினம் ஜசிந்தன் தலைமையிலான குழுவினர் மற்றும் விஷேட பிரிவின் நிலையப்பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு
இதற்கு அமைவாக இல 339, அம்பாள்குளம், கிளிநொச்சி விலாசத்தில் வசித்து வரும் கணவன் மற்றும் மனைவி இருவரும் நேற்றையதினம் (08.12.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து தங்க ஆபரணங்கள், ஒரு IPhone, 198,000 ரூபா பணம், ஹெரோயின் 430mg மற்றும் Mahendra வாகனம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
உதயநகர் பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டு, 2023.12.08ஆம் திகதி நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்பன பாரப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் 2023.12.08ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் பாரப்படுத்தப்பட்டவேளை, பிரதான சந்தேகநபரை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்ததுடன் ஏனைய இருவருக்கும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணையும் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |