முஜிபுர் ரஹ்மானின் அலுவலகத்தில் திருட்டு

Sri Lanka Police Colombo Sri Lanka Politician Sri Lanka Police Investigation Mujibur Rahman
By Fathima May 26, 2023 09:39 AM GMT
Fathima

Fathima

முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் அலுவலகத்தில், பெறுமதியான பொருட்கள் கடந்த (20.05.2023) திகதியன்று திருடப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் முஜிபர்  ரஹ்மானின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கடந்த திங்கட்கிழமை (22.025.20232) மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முஜிபுர் ரஹ்மானின் அலுவலகத்தில் திருட்டு | Theft In Mujibur Rahmans Office

விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார்

இதன்போது  திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியானது சுமார் 50,000 ரூபாய் பெறுமதியான 32 அங்குலம் அகலத்திரை கொண்டதாகும்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார்  முன்னெடுத்துவருகின்றனர்.