நாக்கைக் கடித்ததால் கோமாவுக்குச் சென்ற பெண்

Austria World
By Fathima Sep 21, 2023 01:03 AM GMT
Fathima

Fathima

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கெய்ட்லின் அஸ்லோப் என்ற 27 வயது இளம்பெண்  உணவருந்திக் கொண்டிருந்த பொழுது நாக்கை கடித்தமையினால் கோமா நிலையை அடைந்துள்ளார்.

உணவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, தவறுதலாக நாக்கை கடித்து கொண்டமையால் நாக்கு பகுதியில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில் நாட்கள் செல்லச் செல்ல உடல் நலப் பிரச்சினைகளும் அவருக்கு ஏற்பட ஆரம்பித்துள்ளன.

மேலும் அவரது சருமத்தின் நிறம் ஊதா நிறத்தில் மாற்றமடையத் தொடங்கியதுடன் நாக்கும் கறுப்பு நிறத்தில் மாற்றம் அடைந்து மூச்சு விடுவதிலும் அவருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

மனித மூளையில் சிப் பொருத்தி ஆய்வு! எலன் மஸ்கின் நிறுவனத்திற்கு அனுமதி

மனித மூளையில் சிப் பொருத்தி ஆய்வு! எலன் மஸ்கின் நிறுவனத்திற்கு அனுமதி

நாக்கைக் கடித்ததால் கோமாவுக்குச் சென்ற பெண் | The Woman Went Into A Coma After Biting Her Tongue

(Ludwig’s Angina) என்ற அரிதான நோய்

இந்நிலையில் கெய்ட்லினுக்கு ஏற்பட்டிருப்பது( Ludwig’s angina) என்ற அரிதான நோய் எனவும், இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு செப்சிஸ் மற்றும் உறுப்பு செயலிழப்பு ஏற்படும் எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உடலில் உள்ள ஒக்ஸிஜன் அளவை தக்க வைப்பது, மூச்சுப் பாதையை சீரமைப்பது, உறுப்புகளின் செயலிழப்பை தடுப்பது போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளாவிட்டால் இந்த கோமா நிலை கட்டாயமாகும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நாக்கைக் கடித்ததால் கோமாவுக்குச் சென்ற பெண் | The Woman Went Into A Coma After Biting Her Tongue

எனினும் போராட்டம் மிகுந்த இந்த சிகிச்சைகளுக்குப் பிறகு இப்போது கெய்ட்லின் குணமடைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனக்கு இரண்டாவதாக உயிர் கொடுத்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாக்கை கடித்ததால் பெண்ணொருவ கோமாவுக்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக சாதனை படைத்துள்ள வெங்காயம்

உலக சாதனை படைத்துள்ள வெங்காயம்

45ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் கொடுப்பனவு: இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

45ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் கொடுப்பனவு: இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW