கணவனின் தாக்ககுதலுக்கு இலக்கான மனைவி பலி

Sri Lanka Police Investigation Death
By Pavi Aug 27, 2026 06:37 AM GMT

தலைமன்னார் தொடருந்து நிலையத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 27 வயதுடைய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இளம் பெண் உயிர்மாய்ப்பு

முற்றிய குடும்பத் தகராறு காரணமாக அவரது கணவரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கணவனின் தாக்ககுதலுக்கு இலக்கான மனைவி பலி | The Wife Was Killed In An Attack By Her Husband

இ்ந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலைமன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.