நேச நாடான இஸ்ரேலை கண்டித்துள்ள ஜோ பைடன்

Benjamin Netanyahu Joe Biden United States of America Israel Israel-Hamas War
By Fathima Apr 10, 2024 08:10 PM GMT
Fathima

Fathima

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு (benjamin netanyahu) காசா போரை அணுகும் முறை தவறானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (joe biden) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதல்  

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு செய்வது தவறு என்று நான் நினைக்கிறேன். அவரது அணுகுமுறையுடன் நான் உடன்படவில்லை.

காசாவில் இஸ்ரேலின் குண்டுத்தாக்குதல் கண்மூடித்தனமானது.

நேச நாடான இஸ்ரேலை கண்டித்துள்ள ஜோ பைடன் | The Us President Joe Biden Has Condemned Israel

சர்வதேச உதவிப் பணியாளர்கள் மற்றும் குடிமக்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் மாத்திரமே, இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கமுடியும் என்று கடந்த வாரம் வெள்ளை மாளிகை கூறியிருந்தது.

அத்துடன் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் அமெரிக்கர்கள் உட்பட்ட நிவாரணப்பணியாளர்கள் கொல்லபட்டதை அடுத்தே இந்த எச்சரிக்கையை வெள்ளை மாளிகை விடுத்தது.

நேச நாடான இஸ்ரேலை கண்டித்துள்ள ஜோ பைடன் | The Us President Joe Biden Has Condemned Israel

இந்தநிலையில் இஸ்ரேலியர்கள் போர்நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும் என்பதுடன் காசாவுக்கு கொண்டுசெல்லப்படும் அனைத்து உணவு மற்றும் மருந்துகளுக்கான மொத்த அணுகல்களை அடுத்த ஆறு அல்லது எட்டு வாரங்களுக்கு அனுமதிக்க வேண்டும்.

இஸ்ரேலிய கணக்கீடுகள்

கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

நேச நாடான இஸ்ரேலை கண்டித்துள்ள ஜோ பைடன் | The Us President Joe Biden Has Condemned Israel

இதனையடுத்து இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை ஹமாஸ் ஆளுகைக்கு உட்பட்ட காசா பகுதிகளில் 33,000க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர்.

மேலும் உள்ளூர் சுகாதார அமைச்சின் தகவலின் படி, கிட்டத்தட்ட சுமார் 2.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.