முதலிரவில் வெளிப்பட்ட உண்மை; மனைவி கூறியதகவலால் அதிர்ச்சி அடைந்த மணமகன்!
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் மனைவி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி கலைத்ததை மறைத்த விடயம் தெரிய வந்தமை மாப்பிள்ளைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் சமீபத்தில் திருமணமான நபர் ஒருவர், முதலிரவின் போது மனைவியின் வயிற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஏனெனில் மனைவியின் வயிற்றில் 7 – 8 தையல்கள் போடப்பட்டிருப்பதைக் கண்ட அவர், அதுகுறித்து கேள்வி எழுப்பியபோது கீழே விழுந்ததில் அடிபட்டதால் தையல் போடப்பட்டதாக மனைவி கூறியுள்ளார்.
முன்னாள் காதலனால் கர்ப்பம்
மனவியின் பதிலால் சந்தேகமடைந்த புதுமாப்பிள்ளை புதுப்பெண்ணிடம் துருவி துருவி உண்மையை கூறுமாறு கேட்டுள்ளார்.
அப்போது முன்னாள் காதலன் மூலம் கர்ப்பமானதாகவும், மூன்று மாதங்களுக்கு முன்பு கருக்கலைப்பு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் தன் மனைவியை அவரது தாயின் வீட்டிற்கு அனுப்பி வைத்ததுடன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மனைவியின் அனைத்து தகவல்களையும் மருத்துவமனையில் இருந்து சேகரித்துள்ளார்.
இந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் மணமகனின் மீது ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள அதேவேளை , மணமகன் தனக்கு நியாயமான விசாரணை வேண்டும் என சட்டத்தை அணுகியுள்ளதாக கூறப்படுகின்றது.