விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தமிழ் பெண் உயிரிழப்பு

Sri Lanka Police Sri Lanka
By Nafeel May 15, 2023 02:54 AM GMT
Nafeel

Nafeel

வெலிக்கடை பொலிஸாரிடம் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தமிழ் பெண் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வீட்டு பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் அந்த வீட்டில் பொருட்களை திருடிச் சென்றதாக செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.

பெண் தொடர்பிலான தகவல் பதுளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய செல்வராசா குமாரி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். பெண் வேலை செய்த வீட்டின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த முறைப்பாட்டிற்கமைய பணிப்பெண் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த போது, ​​தனக்கு சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக கூறியதால், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பணிப்பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.