மத்ரசா மாணவர்களை காவுகொண்ட மாவடிப்பள்ளி பாலம்! நிசாம் காரியப்பர் முன்வைத்த கோரிக்கை
மத்ரசா மாணவர்களை காவுகொண்ட மாவடிப்பள்ளி பாலம் நிரம்பி வழிகிறது.பாலத்தை கட்டித் தாருங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
இது தொடர்பில் மேலும் கூறுகையில், டிசம்பரில் பெய்ய வேண்டிய மழை தற்போதே ஆரம்பமாகியுள்ளது. இதனால் நாட்டில் தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை நிலவுகின்றது.
இதேபோன்று சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட ஒரு அனர்த்தத்திற்கு காரணமான மாவடிப்பள்ளி பாலம் தற்போது நிரம்பி வழிகிறது. பாதையில் நீர் நிரம்பியுள்ளது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். எனவே பாலத்தை கட்டித் தாருங்கள் என்று கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.