கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Food Crisis
By Fathima Sep 09, 2023 06:41 AM GMT
Fathima

Fathima

வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாத பண்டிகைக் காலத்தில், தற்போது 1,250 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சியின் விலை

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அஜித் குணசேகர,

“வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடினோம். அதன்படி உற்பத்தி செலவை கணக்கிட்டு கொடுத்துள்ளோம். கலந்துரையாடலுக்கு பின் சில உடன்பாடுகளுக்கு வந்துள்ளோம்.

கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு | The Price Of Chicken Meat Will Decrease

தற்போது நாட்டில் இறைச்சி தட்டுப்பாடு இல்லை. சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் அதிகபட்ச திறனில் உற்பத்தி செய்கின்றனர். அதன்படி எதிர்வரும் மாதங்களில் தட்டுப்பாடு ஏற்படாது.

 ஆகவே எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் உற்பத்தி திறன் அதிகரித்து உற்பத்திகள் அதிகமாகும் என நம்புகிறோம். அதன்படி விலை மேலும் குறையும். எங்களுக்கு உற்பத்தியை தொடர அரசு அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளது.

கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு | The Price Of Chicken Meat Will Decrease

எனவே ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1,100 ரூபாவை எட்டும் என நம்புகிறோம்.ஆனால் சோளம் தான் பெரிய பிரச்சனையாக உள்ளது.

இதற்கு தீர்வாக இலங்கைக்கு சோளத்தை கொண்டுவந்தால் முழுமையாக உணவுக்கு பயன்படுத்தலாம். அப்போது உற்பத்தி செலவை குறைக்க முடியும். பண்டிகை காலத்தில் இந்த விலையை விட குறைவாக எங்களுக்கு கொடுக்க முடியும்."என தெரிவித்தள்ளார்.