நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
விவாதம்
திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், அழிக்கப்பட்ட உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பவும் நேற்று (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா துணை மதிப்பீட்டை நிறைவேற்றுவதற்கான விவாதத்தில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளார்.

திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க நேற்று (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ரூ.500 பில்லியன் துணை மதிப்பீட்டை இன்று நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த துணை மதிப்பீட்டை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.