ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி

Ranil Wickremesinghe Education Teachers
By Shalini Balachandran Jul 03, 2024 05:12 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

பாடசாலைக் கல்விக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இடையறு விளைவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

உதவித்தொகை 

இதன்போது, ஆசிரியர்கள் ஒழுக்கத்துடன் பணியாற்ற வேண்டும் எனவும், ஆசிரியர்கள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தப்போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மற்றும் இந்த விடயத்தில் தான் கடுமையாக நடந்து கொள்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி | The President Condemned The Teachers

மேலும், இந்த வருடம் ஆசிரியர்களுக்கு இருமுறை 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கிய போதும் அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக ரணில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW