புகைப்படத்தை வெளியிட்டு பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
குற்றச்செயலொன்றுடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார், பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பொரளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லெஸ்லி ரணகல மாவத்தையில் கடந்த மே மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் நபரொருவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் புகைப்படத்தில் இருக்கும் அடையாளம் காணப்பட்ட நபர் தற்போது தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்த லங்கா ஏகநாயக்க என்ற (33 வயது) நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிப்பாளர் கொழும்பு குற்றப் பிரிவு - 071 859 1733
நிலைய அதிகாரி விசாரணை பிரிவு 1 - 071 8596503