மனைவியை கொலை செய்ய கணவன் போட்ட திட்டம்!

Sri Lanka
By Nafeel May 06, 2023 02:48 PM GMT
Nafeel

Nafeel

எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் படுகொலை என பிடிகல பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அவரின் காப்புறுதி இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்காகவே கணவர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிடிகல மானம்பிட, தல்கஸ்வல நயாகம பிரதேச சபைக்கு அருகில் வீதியோரம் நின்றிருந்த பெண் ஒருவர் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் இது கொலை என தெரியவந்துள்ளது.

பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரை பொலிசார் கைது செய்தனர். காப்புறுதி இழப்பீடு பெறுவதற்காகவே இந்த கொலை நடந்துள்ளமை தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் வயது 40 வயது எனவும் அவரது கணவரின வயது 25 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.