மொட்டு எம்.பியை விரட்டியடித்த ஊர் மக்கள்
Anuradhapura
Sri Lankan Peoples
Sri Lanka Podujana Peramuna
By Rakesh
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவை அநுராதபுரம் - தம்புத்தேகம பிரதேசத்தின் கொன்வெவ கிராம மக்கள் ஒன்றுதிரண்டு விரட்டியடித்துள்ளனர்.
கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் நீர் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஒன்றின் பணிக்காக எஸ்.எம். சந்திரசேன குறித்த கிராமத்துக்கு நேற்று (02.01.2023) சென்றுள்ளார்.
எதிர்ப்பு தெரிவித்த மக்கள்
தொடர்ந்து, எஸ்.எம். சந்திரசேன எம்.பி. மற்றும் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் உள்ளிட்ட சிலரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த குறித்த கிராம மக்கள், அவர்களின் வாகனத்தை முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியுள்ளது.
இதனையடுத்து, சந்திரசேன எம்.பி. உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.