இலங்கையிலிருந்து புறப்பட்ட முதல் ஹஜ் குழு

Sri Lanka Sri Lankan Peoples Festival Saudi Arabia
By Fathima Jun 04, 2023 08:44 PM GMT
Fathima

Fathima

உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும், ஹஜ் கிரியைகளை நிறைவேற்றுவதற்காக வருகை தரும் ரஹ்மானின் விருந்தினர்களை சவுதி அரசாங்கம் பெரிதும் வரவேற்பதாக தூதுவர் / காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார்.

பிரியாவிடை நிகழ்வு

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் 63 யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழுவிற்கான பிரியாவிடை நிகழ்வில் தூதுவர் / காலித் ஹமூத் அல்-கஹ்தானி கலந்துகொண்டுள்ளார்.

இலங்கையிலிருந்து புறப்பட்ட முதல் ஹஜ் குழு | The First Haj Group To Depart From Sri Lanka

இந்நிகழ்வு இன்று(04.06.2023) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும், ஹஜ் கிரியைகளை நிறைவேற்றுவதற்காக வருகை தரும் ரஹ்மானின் விருந்தினர்களை சவுதி அரசாங்கம் பெரிதும் வரவேற்கின்றது.

ஹஜ் கிரியைகள்

இலங்கையிலிருந்து புறப்பட்ட முதல் ஹஜ் குழு | The First Haj Group To Depart From Sri Lanka

அத்துடன் இரு புனிதஸ்தலங்களினதும் பாதுகாவலரின் அரசாங்கம் அல்லாஹ்வின் வீட்டிற்கு வருகைதரும் யாத்ரிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

அவர்களின் வசதியை உத்தரவாதப்படுத்துவதற்கும், தமது ஹஜ் கிரியைகளை மிகவும் எளிதாக நிறைவேற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து புறப்பட்ட முதல் ஹஜ் குழு | The First Haj Group To Depart From Sri Lanka

இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இசட். ஏ. எம். பைசல், இலங்கை ஹஜ் கமிட்டியின் தலைவர் இப்ராஹிம் சாஹிப் அன்சார், சமய விவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கையின் ஹஜ் முகவர் நிலையங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.