நாட்டின் சாதாரண தரக் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை

Ministry of Education A D Susil Premajayantha Education
By Mayuri Aug 10, 2024 04:51 AM GMT
Mayuri

Mayuri

நாட்டின் சாதாரண தரக் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன் நோக்கமாக சீன அரசாங்கத்திடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் 

இதன்படி, அடுத்த ஆண்டு முதல் பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நாட்டின் சாதாரண தரக் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை | The Digitization Of School Education

இதற்காக நாடாளாவிய ரீதியில் உள்ள 500 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW